கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x

கரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் தங்கவேல் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். களப்பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமித்திட வேண்டும். துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். தமிழகம் முழுமைக்கும் நவீன மறு நில அளவை திட்டம் தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story