இருளர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி இருளர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக துறையின் உத்தரவுபடி விடுபட்ட அனைவருக்கும் சாதி சான்று, வீட்டுமனை பட்டா மற்றும் நல வாரிய அட்டை, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், பழங்குடி இன மக்களுக்கு என மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு இருளர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பொருளாளர் நாகராஜன், அஞ்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் காசி, பவுனு மற்றும் இருளர் சமுதாய மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story