அந்தியூர் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர்
அந்தியூர் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். 4 நாட்களுக்கு ஒருமுறை ஆற்று குடிநீர் வழங்க வேண்டும். சாக்கடை வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் நகரச் செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார். அந்தியூர் நகர தலைவர் பாலன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செங்கோட்டையன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.இ.ஆர்.கோபால், சிறுபான்மைச் தலைவர் ஷேக் மொய்தீன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்டத் துணைத்தலைவர் வி.டி.முத்துராமன், மலைச்சாமி, பவானி நகர செயலாளர் தினேஷ் நாயக்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் நடராஜ், மாவட்டத் துணைத்தலைவர் கார்த்தி, அந்தியூர் ஒன்றிய தலைவர் சேகர், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் எம்.பிரகாஷ் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.