கையில் பருத்தி ெசடிகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கையில் பருத்தி ெசடிகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு பருத்திக்கு நியாயமான விலை கிடைக்கக்கோரி விவசாயிகள் பருத்தி செடிகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். கும்பகோணம் வட்ட தலைவர் ஆதிகலியபெருமாள் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் கலந்துகொண்டு பேசினார். ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கையில் பருத்தி செடிகளை ஏந்தி பருத்தி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பருத்தியை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். பருத்தியை நியாயமான விலை கிடைக்கக்கோரி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் பழவாறு பாசன சங்கத்தலைவர் சாமிநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story