கரூர் மாவட்ட பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


கரூர் மாவட்ட பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கரூர் மாவட்ட பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ைகது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் மாவட்ட பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன், இளைஞரணி செயலாளர் முத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story