அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் முறையாக வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம், வேட்டைக்காரன் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Next Story