காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச.பிரபு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நகர தலைவர் இ.பரத் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.கணேஷ்மல், குங்குமம் குமரேசன், ஒன்றிய தலைவர்கள் ஜானிஜாவித், தண்டபாணி, முனிசாமி, சாந்தசீலன், மாவட்ட துணைத் தலைவர் கே.வி.வெங்கடேசன், சத்யமூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சரவணன், காமல்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.


Next Story