நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதாந்திர மின்கட்டண முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத கரூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று கரூர் காந்திகிராமத்தில் கரூர் தெற்கு மாநகர நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாநகர செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் துருவன் செல்வமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story