ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆற்காடு
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்காடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட கிளை தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வேலு, இணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
வட்டக்கிளை செயலாளர்கள் விநாயகம், கவுதமன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இணை செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை காவலர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
முடிவில் வட்ட கிளை இணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.