தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.பத்மநாபன், தொடக்க உரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் ரங்கன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தை முறைபடுத்த வேண்டும். தேங்கியுள்ள மருத்துவ செலவினத் தொகையை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கம்யூனிஸ்ட் கட்சி மின்வாரிய மாநில துணைத்தலைவர் ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் சிலசீஷன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜாபர்சாதிக், ரவி, பி.எஸ்.என்.எல். ஏ.ஞானசேகரன், சி..கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story