வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்தி பயணப்படி பெற்றுத்தந்ததை நிறுத்தியதை மீண்டும் வழங்கிட வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில், மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநிலச் செயலாளர் கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.


Next Story