சம நீதி மக்கள் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சம நீதி மக்கள் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
காரைக்குடி
காரைக்குடி 5 விளக்கு அருகில் சம நீதி மக்கள் கழகத்தின் சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் சிங்கை குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் லதா கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அக்னி சாகுபர் சாதிக், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன், தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் இமயம் சரவணன் ஆகியோர் பேசினர். இதில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் பெரியார் முத்து, நாம் தமிழர் கட்சியின் மண்டல நிர்வாகி மாறன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சிவாஜி காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சம நீதி மக்கள் கழக நகர செயலாளர் சல்மான் கான் நன்றி கூறினார்.