தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் புருஷோத்தமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் ஒன்றிய செயலாளர் யோகலட்சுமி, ஒன்றிய பொருளாளர் தனம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story