இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிரசவம், குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்களை அன்னவாசல் அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன், மாவட்ட செயலாளர் செங்கோடன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவமனையின் அவலநிலை குறித்து பேசினர். அப்போது நோயாளி ஒருவர் கோமா நிலையில் படுக்க வைத்தும், பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மருத்துவ நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் பறை அடித்து கோரிக்கைகளை முழக்கமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story