தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, மே.21-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகனின் மனைவி ராஜகுமாரி 20.9.2021 அன்று கர்ப்பபை அறுவை சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 3 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த சமயத்தில் போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் ராஜகுமாரியின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜெய்சங்கர், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சங்கரி உள்ளிடோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், ராஜகுமாரியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது ராஜகுமாரி சாவுக்கு நீதி வழங்க வேண்டும்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.Related Tags :
Next Story