சுதந்திர போராட்ட தியாகி படத்தின் மீது சாணம் வீசியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


சுதந்திர போராட்ட தியாகி படத்தின் மீது சாணம் வீசியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 11:57 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட தியாகி படத்தின் மீது சாணம் வீசியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த புணவாசிப்பட்டி நரசிங்கபுரம் பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் படம் வரையப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வ.உ.சிதரம்பரனார் படத்தின் மீது மர்மநபர்கள் சாணத்தை வீசி சென்றுள்ளனர். இதையடுத்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு கூடிநின்ற இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வ.உ.சிதம்பரனார் படத்தில் இருந்த சாணியை போலீசார் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.

இந்நிலையில் வ.உ.சிதரம்பரனார் படத்தை அவதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் நேற்று லாலாபேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் அண்ணாசரவணன் தலைமை தாங்கினார். இதில் வ.உ.சிதம்பரனார் தங்கை வழி பேத்தி மாணிக்கவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் படத்தை 2 முறை அவமதிப்பு செய்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுட்டவர்களை வாரத்திற்குள் கைது செய்யாவிட்டால் அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வோம், என்றார்.


Next Story