விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்


விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விருதுநகர்

சிவகாசி

விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருத்தங்கல், காளியம்மன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்டத் தலைவர் முத்துக்குமார், நிர்வாகிகள் பாண்டியன், மனோஜ்குமார், வக்கீல் ராம்குமார், சண்முகராஜ், வீரமுத்து, பெருமாள், ஆதி தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சுப்புராஜ், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டீஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story