காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரி ஆர்ப்பாட்ட


காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரி ஆர்ப்பாட்ட
x

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார்வாகன சட்டத்தை கைவிட வேண்டும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். அடிக்கடி சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story