சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் பகுத்தறிவாளன் முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்து பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதி வழங்கிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் நித்திஷ் நன்றி கூறினார்.


Next Story