மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்


மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
x

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

திருச்சி:

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் என்ஜினீயர்கள் சங்கம், ஐக்கிய சங்கம், சம்மேளனம், ஐ.என்.டி.யு.சி., ஓய்வு பெற்றோர் சங்கம், மின் துறை பொறியாளர் அமைப்பு உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். வாரிய உத்தரவை திரும்பப்பெற வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story