துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்

திருமானூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமநாதன், மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் ெதரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோவிலூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும். கோவிலூர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு அருகில் இயங்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு சிறுநீரக கல்லடைப்பு நோய் வருவதாகவும், எனவே அதனை பரிசோதித்து சுத்தமான குடிநீர் வழங்க வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கோவிலூர் மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story