முறைசாரா தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


முறைசாரா தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

முறைசாரா தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் துறைமங்கலம் நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முறைசாரா தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்த வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து முறை சாரா தொழிலாளர்களுக்கும் வீடு கட்டித்தரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாவட்ட தொழிலாளர் நலவாரிய கண்காணிப்புக்குழு கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான ஆட்டோ டிரைவர்கள், பெண் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story