ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
புவனகிரியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர்
புவனகிரி,
புவனகிரி அருகே வீரமுடையநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக தெரிகிறது. இதனை மீட்டுத்தரக்கோரி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தாசில்தாரிடம் கோரிக்கையை மனுவாக அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் பெரிய குப்பம் கிராம நாட்டார்கள், ரஜினிவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மணிகண்டன், மக்கள் அதிகாரம், தோழர் மணியரசன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விஜய் மக்கள் இயக்கம், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story