சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்


சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
x

மீன்சுருட்டி அருகே சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்லாத்தூர்-மீன்சுருட்டி சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். இந்த சாலை வழியாக இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story