விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி


விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 11 March 2023 12:30 AM IST (Updated: 11 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மாமர இலைகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

தேனி அருகே கோவிந்தநகரம் கிராமத்தில், மதுரை வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அங்கு மாமர இலைகளில் ஏற்படும் கருப்பு பூஞ்சான் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது. இதில், மாணவி ராஜஸ்ரீ, மைதா கரைசல் மூலம் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தார். விவசாயிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

அதுபோல், தப்புக்குண்டுவில் தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது. அதில், மதுரை வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலைய மாணவி ரித்திகா, தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.


Related Tags :
Next Story