2 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சம்


2 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சம்
x

2 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சமயங்களில் பருவகால காய்ச்சல் பரவல் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தற்போது பரவலாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது. இதுதவிர பரமக்குடி சுகாதார வட்ட பகுதிகளில் அதிக அளவில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கும், ஓலைகுடா பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர காய்ச்சல் அறிகுறிகள் உள்ள ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story