2 சிறுவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு
2 சிறுவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இவர்களில் பலருக்கு நடத்தப்பட்ட சோதனையில் டெங்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 2 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் சுகாதார வட்டத்தில் ராமேசுவரம் ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கும், தொருவளூர் பகுதியை சேர்ந்த 24 வயது நபருக்கும், ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணிற்கும், மண்டபம் சேது நகரை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கும் டெங்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல பரமக்குடி சுகாதார வட்டத்தில் சிலருக்கு டெங்கு பதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story