டெங்கு, மலேரியா நோய் பரவாமல் தடுக்க வேண்டும்-திருமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


டெங்கு, மலேரியா நோய் பரவாமல் தடுக்க வேண்டும்-திருமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x

டெங்கு, மலேரியா நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என திருமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

டெங்கு, மலேரியா நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என திருமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர் லதா ஜெகன், துணை தலைவர் வளர்மதி அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், பாண்டியன் முன்னிலை வகித்தனர். மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல், ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் யூனியன் அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமித்து அங்கு தேவையான வசதிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிக்கை பெறப்பட்டது.

மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளங்கள் உள்ளிட்ட இடங்களில் உடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அவசரகால ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

காவிரி கூட்டுக்குடிநீர்

வாகைகுளம் ஒன்றிய கவுன்சிலர் மின்னல் கொடி ஆண்டிச்சாமி கூறும்போது, காவிரி கூட்டுக்குடிநீர் தங்களுடைய பகுதிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, உச்சப்பட்டிசெல்வம், சிவபாண்டி ஓம்ஸ்ரீ முருகன் உள்ளிட்ட 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story