டெங்கு காய்ச்சல் பாதிப்பு
கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேருக்கு டெங்கு காய்ச்சல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 8-ந்தேதி தங்களது வீட்டிற்கு வந்தனர். மறுநாளில் இருந்து அவர்கள் 3 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதனால் 3 பேரும் கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் ரத்தமாதிரியை ஆய்வு செய்தனர். அதில் 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருந்து, மாத்திரைகள்
தகவல் அறிந்த அன்பழகன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு வந்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்வையிட்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பி்ன்னர் அவர்களுக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கேட்டுக்ெகாண்டார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் 120 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டையும் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்தால் உடனடியாக அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.