டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
அலமேலுமங்காபுரம் அரசுப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார்.
இதில் வேலூர் மாநகராட்சி நடமாடும் மருத்துவக்குழு மருத்துவர் உமாசங்கர் தலைமையில் செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் 65 மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story