கிணத்துக்கடவு பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்-மாவட்ட மலேரியா அலுவலர் நேரில் ஆய்வு


கிணத்துக்கடவு பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்-மாவட்ட மலேரியா அலுவலர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sep 2023 7:15 PM GMT (Updated: 17 Sep 2023 7:16 PM GMT)

கிணத்துக்கடவு பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்்து வருகிறது. இதனை மாவட்ட மலேரியா அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்்து வருகிறது. இதனை மாவட்ட மலேரியா அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

தடுப்பு நடவடிக்கைகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதேபோல் கிணத்துக்கடவு பேரூராட்சியில் அண்ணாநகர், அரசம்பாளையம் உள்ளிட்ட 2 இடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட கிணத்துக்கடவு பேரூராட்சியில் அண்ணாநகர், அரசம்பாளையம் ஊராட்சி ஆகிய 2 இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் புகை மருந்து அடிக்கும் பணி, வீடுகள் தோறும் சுகாதாரத் துறையினர் காய்ச்சல், சளி அதிகம் உள்ள நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் அரசம்பாளையத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்று வருவதால் இந்த பகுதியை மாவட்ட மலேரியா அலுவலர் சாந்தி, கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சி. சமீதா மற்றும் மருத்துவ குழுவினருடன் அரசம்பாளையத்தில் வீடு வீடாக சென்று பாத்திரங்களில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் உள்ளதா என பார்வையிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேலு, சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், செல்வம், கார்த்திகேயன், ரிவனேஷ், கார்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story