டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி பேரூராட்சி மல்லாங்கிணறு, கல்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர் கீதா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வைத்தார். காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் பேரணியை தொடங்கி வைத்தார். டாக்டர் பிருந்தா, சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர்கள் கருப்பையா, சின்னச்சாமி ஆகியோர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து பேசினர். பேரணியில் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் கயல்விழி, சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி, தொண்டு நிறுவன பிரதிநிதிகள் எஸ்.பி.எம் அழகர்சாமி, சுரபி விக்டர், ஜனசக்தி சிவக்குமார், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி மைதான வளாகத்தில் டெங்கு நோய் தடுப்பு பற்றி அமைக்கப்பட்ட கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story