டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்


டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 Sept 2023 1:00 AM IST (Updated: 15 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

டெங்கு பரவல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் 6 மாதங்களுக்கும் மேலாக ஒரு சிலர் நாள்தோறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஒரு பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்ய்பட்டது.

இதன் எதிரொலியாக டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு, வீடாக ஆய்வு

இதைத்தொடர்ந்து நகராட்சி முழுவதும் சுமார் 5 குழுக்களை கொண்ட 50 ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடுகளில் உள்ள தொட்டிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரில் டெங்கு கொசு முட்டை இருக்கும் பட்சத்தில் தண்ணீரை அகற்றுவது, டெங்கு கொசு முட்டைகளை அழிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். மேலும் கொசு மருந்து அடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று ஒவ்வொரு வீடாக செல்லும் ஊழியர்கள் டெங்கு வராமல் எவ்வாறு தடுப்பது, வீடுகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்வது என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தொட்டிகள், பாத்திரங்களில் சேகரித்து வைத்துள்ள தண்ணீரை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story