டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
குன்னூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடந்தது.
குன்னூர்
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் தேங்கி நிற்கும் கழிவுநீர், வீடுகளில் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டு இருக்கும் டயர்கள், ஆட்டுகல் போன்றவற்றில் உள்ள தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குன்னூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் மருந்து தெளிப்பது, வீடுகளில் பயனற்று கிடக்கும் பழைய டயர்களை அகற்றுவது போன்ற பணிகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ேமலும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.