நெகமம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணி
நெகமம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணி
நெகமம்
நெகமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்குவை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் ரோடுகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. நெகமம் பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று டெங்குவால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: நெகமம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பஸ் நிலையம்,அரசு அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் மருந்து அடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில், தேவையிலாத தொட்டி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கிய தண்ணீரை அகற்ற வேண்டும் எனவும், இதனால் கொசு உற்பத்தி பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.