ஊராட்சி தலைவர், துணை தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிப்பு
ஊராட்சி தலைவர், துணை தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.
திருச்சி
லால்குடி ஒன்றியம் ஜங்கம்மராஜபுரம் ஊராட்சி தலைவராக வீரமணி, துணை தலைவராக மணிகண்டன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீது, விதிமுறைகளை மீறி மனைப்பிரிவு விற்பனை அங்கீகாரம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் விதிமீறலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் வீரமணி மற்றும் துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203-ன் கீழ் அனைத்து கணக்குகளும் கையொப்பமிடும் அதிகாரத்தை தடை செய்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story