போலீஸ் குடியிருப்புகளில் துணை கமிஷனர் திடீர் ஆய்வு


போலீஸ் குடியிருப்புகளில் துணை கமிஷனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jan 2023 1:00 AM IST (Updated: 23 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அன்னதானப்பட்டியில் போலீஸ் குடியிருப்புகளில் துணை கமிஷனர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, லைன்மேடு மற்றும் அன்னதானப்பட்டியில் போலீஸ் குடியிருப்பு பகுதிகளுக்கு நேற்று காலை சென்றார். குடியிருப்புகள் சுத்தமாக பராமரிக்கபட்டு வருகின்றனவா? என ஆய்வு செய்தார். அங்குள்ளவர்களிடம் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர்களிடம் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தினமும் காலை, மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

1 More update

Next Story