கனிமவியல் துணை இயக்குனர் ஆய்வு


கனிமவியல் துணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sept 2023 5:15 AM IST (Updated: 17 Sept 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை, கனிமவியல் துணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே அத்திகுன்னா பகுதியில் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் திடீரென 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், கூச்சலிட்டவாறு ஓட்டம் பிடித்தனர். மேலும் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். அப்பகுதியை சுற்றிலும் கம்புகளால் தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று ஈரோடு கனிமவியல் துறை துணை இயக்குனர் ரமேஷ் பள்ளம் ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் ஊட்டி புவியியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளம் விழுந்த இடத்தில் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு அனுப்பி, அதன் அறிக்கை வந்த பின்னரே பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் குரு, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். மேலும் அங்கு வசிக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறு தேயிலை தோட்ட நிர்வாகத்தினருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story