டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x

ஒரே நபருக்கு அதிக மது பாட்டில்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசுமதி (திருச்சி மாநகர்), ஜெயசித்ரா (திருவெறும்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்து கொண்டு டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது, 19 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும். கடைமுன் யாரும் குடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அரசு அனுமதித்து உள்ள நேரத்திற்கு முன்பும், பின்பும் மது விற்கக்கூடாது. ஒரே நபருக்கு மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சுமார் 150 மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story