ரூ.71½ கோடியில் தூர்வாரும் பணிகள்


ரூ.71½ கோடியில் தூர்வாரும் பணிகள்
x

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.71½ கோடியில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது என்று கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா கூறினார்.

திருவாரூர்

திருவாரூர்;

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.71½ கோடியில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது என்று கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூர்வாரும் பணிகள் குறித்து கடலூர், நாகை மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது

காவிரி டெல்டா பகுதியான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.71 கோடியே 50 லட்சம் செலவில் 549 தூர்வாரும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

115 தூர்வாரும் பணிகள்

இதில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் செலவில் 115 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்,, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி (திருச்சி மண்டலம்) கண்கானிப்பு பொறியாளர் அன்பரசு, செயற்பொறியாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story