வேலை கிடைக்காத விரக்தியில் மருத்துவ பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில்  மருத்துவ பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 24 Sep 2022 7:30 PM GMT (Updated: 24 Sep 2022 7:31 PM GMT)

தற்கொலை

ஈரோடு

ஈரோட்டில் வேலை கிடைக்காத விரக்தியில் மருத்துவ பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவ பிரதிநிதி

ஈரோடு பூந்துறை ரோடு சரஸ்வதி மகால் பகுதியை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 48). இவருடைய மனைவி நிஷா. இவர்களுக்கு ஷாரூக், சமீர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஷாரூக் தனியார் கல்லூரியில் பி.டெக் 4-வது ஆண்டு, சமீர் பிளஸ்-1 படித்து வருகிறார்கள். அக்பர் அலி ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். அதன்பிறகு வேறு வேலை கிடைக்காததால் மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும், 2 மகன்கள் படிக்கும் நிலையில் வேலை கிடைக்கவில்லை என்றும் புலம்பி வந்தார். இதனால் அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு அக்பர்அலி படுக்கை அறைக்குள் சென்று தூங்கினார். நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் திறக்கப்படாததால் கதவின் தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அக்பர்அலி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடல் கருப்பு நிறமாக மாறி இருந்தது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்பர்அலி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் விஷம் குடித்து அக்பர்அலி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து


Next Story