400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

விழுப்புரம்

செஞ்சி

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையிலான போலீசார் கஞ்சூர் மலைப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக 2 பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story