தேவர் ஜெயந்தி விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்


தேவர் ஜெயந்தி விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
x
தினத்தந்தி 29 Oct 2022 8:25 AM IST (Updated: 29 Oct 2022 9:01 AM IST)
t-max-icont-min-icon

பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற 30-ந்தேதி பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

மதுரையில் இன்று இரவு தங்கும் அவர் நாளை காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார்.

அதன்பிறகு பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அமைச்சர் பெருமக்களும் மரியாதை செலுத்துகின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி மதியம் சென்னை திரும்புகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமம் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பேர் வருகை தர உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story