தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை


தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
x

கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story