பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்


பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2023 9:45 AM IST (Updated: 22 Jun 2023 9:45 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் அறிவுரை வழங்கினார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை வந்த தமிழக முன்னாள் டி.ஜி.பி. டபிள்யூ.ஐ.தேவாரம், கோவை மாநகர போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு போலீசாரின் பயிற்சியை பார்வையிட்டார். அப்போது அவர் பயிற்சி பெற்று வந்த போலீசார் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவல்துறை என்பது மிகவும் கண்ணியமானது ஆகும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்களிடம் மிகவும் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் சில தகவல்களை நமக்கு கொடுப்பார்கள். அதுபோன்று தற்போது படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் காவல்துறைக்கு வந்து உள்ளனர். எனவே நீங்கள் காவல்துறையை மிகவும் சிறந்ததாக கொண்டு வர வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் செட்ரிக் மேன்யூவல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story