பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கம்


பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கம்
x

பொதுமக்களுக்காக பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட்டது.

புதுக்கோட்டை

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் அபாய குறைப்பிற்கான தேசிய பேரிடர் எச்சரிக்கை தளம் மற்றும் ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பின் செல்போன் செயலி ஆகியவை உருவாக்கி உள்ளது. இந்த தளம் மற்றும் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் பேரிடர் பாதிக்கும் பகுதி, பேரிடரின் தீவிரம், மீட்பு நடவடிக்கை, அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம். எனவே, பொதுமக்கள் வலைதள பயன்பாட்டாளர்: https://sachet.ndma.gov.in/, ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்: bit.ly/3Fb3Osz, ஐபோன் பயன்பாட்டாளர்: apple.co/3ywcV3f என்ற வலைதள முகவரியை பயன்படுத்தி மேற்படி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


Next Story