கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்


கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்
x

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்

திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரடாச்சேரியில் ரூ.23 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செம்மங்குடி ஊராட்சி பகுதியில் ரேஷன்கடை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலறை கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

கலெக்டர் ஆய்வு

எண்கண் ஊராட்சியில் உள்ள தாமரைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, படித்துறை, குளியலறை கட்டிடங்கள், ரேஷன்கடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊர்குடி ஊராட்சியில் மரத்தெருவில் உள்ள செம்மன்குளத்தில் தூர்வாரும் பணி மற்றும் படித்துறை, விஸ்வநாதபுரம் ஊராட்சியில் மேலகரை பகுதியில் மயான கொட்டகை கட்டப்பட்டுவருவதையும், பத்தூர் மேல்கரை பகுதியில் ரேஷன் கடை, திருகளம்பூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்களுக்கான கழிவறை, வண்ணன்குளம் தூர்வாரும் பணி மற்றும் படித்துறை கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

அப்ேபாது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார். ஆய்வின்போது பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story