விருதுநகர் யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள்

விருதுநகர் யூனியனில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
விருதுநகர்,
விருதுநகர் யூனியனில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
அங்கன்வாடி கட்டிடம்
விருதுநகர் யூனியன் கூரை கூண்டு பஞ்சாயத்து பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த நாற்றாங்கால் தோட்டம் அமைக்கும் பணிகளையும், விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒட்டு மொத்த வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும், சிவஞானபுரம் பஞ்சாயத்து சின்னமூப்பம்பட்டி கிராமத்தில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.
இனாம் ரெட்டியபட்டி பஞ்சாயத்தில் வீர குடும்பன் பட்டியில் நிதி ஆயோக்திட்டத்தின் கீழ் ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ஒண்டிப்புலி நாயக்கனூர் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.4.3 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவில் மரம் நடப்பட்ட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ேமற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் தண்டபாணி, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செண்பகவல்லி, சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






