ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 2 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்


ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 2 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நிறைவேற்றப்பட்டது.

தேனி

ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் ஆணையாளர்கள் ரவிச்சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19 வார்டுகளை சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்தில் வரவு-செலவு வாசிக்கப்பட்டு, 35 பொருட்களின் மீது விவாதம் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19 வார்டுகளில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குடிநீருக்கான அடிப்படை ஆதாரங்களை செய்தல், தெருவிளக்கு, மயான சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2 கோடி நிதியை பகிர்ந்து வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story