ஊருணியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் ஆய்வு


ஊருணியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் ஆய்வு
x

ஊருணியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள சின்னக்குளம் ஊருணியை தூர்வார வேண்டும் என்று மல்லாங்கிணறு, முடியனூர் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மல்லாங்கிணறு பேரூராட்சி சின்னகுளம் ஊருணியை மேம்பாடு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சின்னக்குளம் ஊருணி மேம்பாடு செய்யும் பணி தொடங்கப்படுள்ளது.

இந்த ஊருணிக்கரையில் பேவர்பிளாக் கல் பதிக்கப்பட்டு பொதுமக்கள் தினமும் நடை பயிற்சி செய்யவும் மற்றும் மின்விளக்கு, பூங்கா போன்றவை அமைக்கப்படவுள்ளது. சின்னக்குளம் ஊருணி மேம்பாடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, காரியாபட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மல்லாங்கிணறு போஸ், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story